Select Location
All Locations
State
Region
City / District
“கர்நாடக துணை முதல்வராகிறார் ஜி.பரமேஸ்வரா” - சித்தராமையா தகவல்

“கர்நாடக துணை முதல்வராகிறார் ஜி.பரமேஸ்வரா” - சித்தராமையா தகவல்

பெங்களூரு: கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் இன்று பதவியேற்க உள்ள நிலையில், அவருடன் மாநிலத்தின் துணை முதல்வராக ஜி.பரமேஸ்வரா பதவியேற்க உள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று மாலை மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள டி.கே.சிவகுமாரும், துணை முதல்வராக பதவியேற்க உள்ள ஜி.பரமேஸ்வராவும் என்னை சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்தனர். இரு தலைவர்களுக்கும் நான் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தேன்” என்றார்.

டி.கே.சிவகுமார் முதல்வராக பதவியேற்கும் விழா பெங்களூருவில் மக்கள் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இன்றைய பதவியேற்பின்போது, சித்தராமையா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த ஜி.பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். மேலும், கே.ஹெச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சத்தீஷ் ஜரகிஹோலி, கிருஷ்ணா பைரேகவுடா, பிரியங்க் கார்கே, யு.டி.காதர், ஈஸ்வர் கந்தரே, யதீந்திர சித்தராமையா, பைரதி சுரேஷ், ஷரண் பிரகாஷ் பாட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News