Select Location
All Locations
State
Region
City / District
டெல்லி முதல்வருக்கு தமிழக பாஜக கடிதம்

சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் வைக்க வேண்டும்: டெல்லி முதல்வருக்கு தமிழக பாஜக கடிதம்

புதுடெல்லி: டெல்​லி​யில் தமிழர்​கள் அதி​கம் வாழும் பகு​தி​களில் ஒன்று சக்​கூர்​பூர். இதனால், கடந்த 33 ஆண்​டு​களுக்கு முன்​பு, டெல்லி முனிசிபல் கார்ப்​பரேஷன் சார்​பில் சக்​கூர்​பூர் காலனியின் சாலைக்​கு, ‘திரு​வள்​ளுவர் மார்க்’ என்று பெயரிடப்பட்டது. கடந்த 6 ஆண்​டு​களுக்கு முன்பு சக்​கூர்​பூர் வழி​யாக புதி​தாக ரோஸ் நிற மெட்ரோ ரயில் பாதை அமைக்​கப்​பட்​டது. இதற்​கு, ‘திருவள்​ளுவர் மெட்ரோ நிலை​யம்’ என்று பெயரிட வேண்​டும் என்று டெல்லி வாழ் தமிழர்​கள் கோரிக்கை வைத்​தனர்.

இந்​நிலை​யில், கடந்த புதன் ​கிழமை டெல்லி முதல்​வர் ரேகா குப்தா தலை​மை​யில், மாநிலப் பெயர் மாற்ற ஆணை​யத்​தின் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில், உள்​ளூர் அடையாளங்​களை வலுப்​படுத்​துதல், தேசி​யத் தலைநகர் முழுவதும் உள்ள மெட்ரோ நிலை​யங்​கள் மற்​றும் பொது இடங்களுக்​குப் பெயர் மாற்​றம் செய்ய டெல்லி அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதற்​கிடை​யில், தமிழ்​நாடு பாஜக இணை அமைப்​பாளர் நாச்சியப்​பன், முதல்​வர் ரேகா குப்​தாவுக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்தில், "கடந்த 8 ஆண்​டு​களாக டெல்லி வாழ் தமிழர்​கள் எழுப்பி வரும் இந்த கோரிக்​கையை ஏற்க மாநிலப் பெயர் மாற்ற ஆணை​யத்​துக்​கும் பரிந்​துரைக்​கப்​பட்​டிருந்​தது. இடை​யில் வந்த கரோனா பரவலில் இது தடைபட்​டிருந்​தது. எனவே, இந்த நீண்டகால கோரிக்​கையை முதல்​வர் உடனடி​யாக நிறைவேற்​றும் வகை​யில், சக்​கூர்​பூர் மெட்ரோ ரயில் நிலை​யத்​துக்கு திருவள்ளுவர் பெயர் வைக்​கும்​படி கேட்​டுக் கொள்​கிறேன்" என்று தெரி​வித்​துள்​ளார்.

இதற்​காக முதல் முயற்சி எடுத்த டெல்லி தமிழர்​கள் கலாச்​சார இணைப்​பின் பொதுச் செய​லா​ளர் எம்​.நடேசன் ‘இந்து தமிழ் திசை’​யிடம் கூறுகை​யில், "திரு​வள்​ளுவர் பெயரை வைக்க தமிழக முதல்​வ​ராக இருந்த இபிஎஸ், தமாகா தலை​வர் ஜி.கே.வாசன் ​உள்​ளிட்​டோரும் ஆதர​வுக் கடிதம் அளித்​தனர். இதற்​காக, முன்​னாள் முதல்​வர் கேஜ்ரி​வாலிடம் நேரிலும், பிரதமர் மோடி​யிடம் 2018ம் ஆண்டிலும் வலி​யுறுத்​தினோம். இப்​பட்​டியலில் பாஜக​வும் இணைந்து திரு​வள்ளு வருக்​காக வலி​யுறுத்​து​வது வரவேற்கத்​தக்​கது. இனி டெல்லி அரசு தாம​திக்காமல் திருவள்ளுவர் பெயரை அறிவிக்​கும்​ என நம்​பு​கிறோம்​" என்​றார்​.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News