"விஜய்யிடம் ராஜ்யசபா சீட் கேட்டுள்ளோம்" - கிரிஷ் சோடங்கர்
தமிழகத்திற்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், “முதலமைச்சர் விஜய்யிடம் ராஜ்யசபா இடம் கேட்டுள்ளோம். ராஜ்யசபா இடம் தொடர்பாக பரிசீலனை செய்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் எங்களது வளர்ச்சி அதிகரிக்க ஒரு இடம் வழங்க வேண்டும். ராஜ்யசபா சீட் விவகாரத்தை தவிர வேறு எதையும் முதலமைச்சர் விஜயிடம் பேசவில்லை. தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை சீட்டை காங்கிரஸூக்கு பெறுவதில் உறுதியாக உள்ளோம்” என்றார்.