கன்னியாகுமரிக்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: கன்னியாகுமரியில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கன்னியாகுமரிக்கு இரண்டு நாட்கள் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மலை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.