Select Location
All Locations
State
Region
City / District
தேசிய தலைவர்களிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்த அண்ணாமலை

தேசிய தலைவர்களிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்த அண்ணாமலை

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே. அண்ணாமலை, டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேசியுள்ளார். டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்துள்ள அண்ணாமலை, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தனது அதிருப்திக்கான காரணங்களை விவரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று டெல்லி சென்ற முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அங்கு தேசிய தலைவர்களை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து இருக்கிறார். அதன் பின்பு அவரது குருநாதரான பிஎல் சந்தோஷ் அவர்களையும் சந்தித்து பேசி இருக்கிறார். நான் எதற்காக கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று தனது விளக்கத்தையும் குருநாதரிடம் விவரமாக கூறியிருக்கிறார். இறுதியாக 1:30 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளார். RSS இன் மூத்த தலைவர்களையும் சந்தித்து பேசி இருக்கிறார். அண்ணாமலை அவர்களின் அடுத்த பயணம் தேசியத்தைச் சார்ந்த தான் இருக்கும். அவர் சிறிது காலம் மக்கள் இயக்கமாக ஆரம்பித்து அதனை முழுமையாக அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு அனைத்து திட்டங்களையும் தயார் செய்து வைத்திருக்கிறார். ஒரு விரிவான பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த இருக்கிறார், அதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த மாட்டார் என தகவல் வருகின்றது. அவர் பகிரும் அனைத்து வீடியோக்களும் இனிமேல் சமூக ஊடகங்களில் தான் அதிக அளவு இருக்கும் எனவும் அவருடன் நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்

Source : Smacy News

1 hour ago

Home Flash News