Select Location
All Locations
State
Region
City / District
தமிழக அரசு அதிரடி : டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு விற்ற 277 பேர் சஸ்பெண்ட்..!!

தமிழக அரசு அதிரடி : டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு விற்ற 277 பேர் சஸ்பெண்ட்..!!

தமிழக மாநில வாணிபக் கழகம் வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் மதுக்கடையில் மே 28ல் நடத்தப்பட்ட சோதனையில் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபானம் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக ரூ.10 முதல் ரூ.50 வரையும், அதற்கு மேல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டு கடைப்பணியாளர்கள் மீது குற்றச்சாட்டின் அடிப்படையில் 277 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பணியாளர்களின் அபராத தொகை சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் வட்டித்தொகை வங்கியில் செலுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் கேட்க மாட்டேன் என உறுதி அளிக்க வேண்டும். அவர்கள் செலுத்திய காப்புத்தொகை அரசிடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொது கலந்தாய்வு வாயிலாகவே மீண்டும் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.மீண்டும் தவறு செய்தால் நிரந்தர பணி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்படும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source : Smacy News

1 hour ago

Home Flash News