Select Location
All Locations
State
Region
City / District
தென்கொரிய சுற்றுலாத்துறையின் கௌரவ தூதரானார் பிரியங்கா மோகன்!

தென்கொரிய சுற்றுலாத்துறையின் கௌரவ தூதரானார் பிரியங்கா மோகன்!

தென் கொரிய சுற்றுலாத் துறையின் தூதராக (Honorary Ambassador) திரைப்பட நடிகை பிரியங்கா மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகை பிரியங்கா மோகன், தென் கொரியா நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான கெளரவ தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேட் இன் கொரியா (Made in Korea) என்ற இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம், 2026 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப்படத்தை ரா. கார்த்திக் எழுதி இயக்கினார். பிரியங்கா மோகன், பார்க் ஹே-ஜின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த மார்ச் 12 அன்று வெளியான இந்த படம், மூன்று வாரங்களுக்குள் 1.35 கோடிப் பார்வைகளைக் கடந்து உலக அளவில் ஆங்கிலம் அல்லாத திரைப்படங்கள் பிரிவில் முதலிடம் பிடித்தது. அதுமட்டுமின்றி,54 நாடுகளில் 'மேட் இன் கொரியா' திரைப்படம் வரவேற்பைப் பெற்றது.

தென் கொரியாவில் பெருமளவில் படமாக்கப்பட்ட 'மேட் இன் கொரியா' திரைப்படத்தின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாகவே பிரியங்கா மோகனுக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Source : Smacy News

1 hour ago

Home Flash News